Shri Arunachaleswarar Temple Thiruvannamalai


Arulmigu Unnamulai Amman and Arulmigu Arunachaleswarar Temple Thiruvannamalai
அருள்மிகு உண்ணாமுலை அம்மன் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை



Thiruvannamalai Arunachaleswarar Temple

அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை !!

Thiruvannamalai Arulmigu Arunachaleswarar Temple







Arulmigu Arunachaleswarar Temple Thiruvannamalai




அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை


1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருஅண்ணாமலையார் கோவில் பெரிய_நந்தி



சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் . ஆனால் திருஅண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான காரணம்: நினைத்தாலே முக்தியருளும் ஸ்தலம்... திருஅண்ணாமலை.... இங்கு வசிப்பவர்கள் எத்தனை பேருக்கு இந்த அதிசயம் மகத்துவம் தெரியும் என்று தெரியவில்லை.... முகலாயர்கள் காலத்தில் திருஅண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது.... அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான வீரேகிய முனிவர் முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார். திருஅண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி கால்மாற்றி அமர்ந்த வரலாறு: முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்றனர். முகலாய அரசன் "நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்?" அதற்கு அந்த ஐவர் இந்த காளை எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம்" என்றனர். அதற்கு அரசன் " உம் சிவன் இந்த அண்ணாமலையார் உன்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் ,வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல்" என்று கூறி வெட்டிவிட்டான்.

உடனே பதறிய ஐவரும் அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் "நமசிவாய" எனஜபித்துக்கொண்டு இருக்கிறான்.அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்" என்றார். உடனே வடக்கே அந்த ஆத்ம பக்தனை தேடி சென்ற அந்த ஐவரும் "நமசிவாய" என்ற மந்திர சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற பார்த்த போது 15 வயது பாலகன் ஒருவனை கண்டனர். ஐவரும் "இச்சிறு பாலகனா பக்தன் " என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது . அச்சிறுபாலகன் நமசிவாய மந்திரம் கூறி புலியை வென்று அவர்களை காப்பாற்றினான். ஐவரும் நடந்ததை கூறி அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர். அண்ணாமலையார் கோவிலுக்கு ஐவருடன் வந்தடைந்த அந்த பாலகன் அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். உடனே அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று "நமசிவாய" மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச்செய்தான். அதை நம்ப மறுத்த முகலாய அரசன்"நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் " எனக் கூறி நம்ப மறுத்தான்.

"சரி உனக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கின்றேன்,இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன்,நான் வென்றால் இடித்து விடுவேன் " என கூறினான். அதற்கும் சளைக்காத அச்சிவபாலகன் அண்ணாமலையார் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான். அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் ,அவருக்கு சக்தி இருந்தால் அந்த மாமிசத்தை பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர். அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனை கண்ட ஐவரும் பாலகனும் "#ஓம்_நமசிவாய" "#அண்ணாமலைக்கு_அரோகரா" எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர்.... இதனையும் நம்பாத அந்த அரசன் கடைசியாக ஒரு போட்டியை அறிவித்தான்.

அண்ணாமலையார் கோவில் பெரிய நந்தியை பார்த்து " இந்த உயிரில்லாத நந்தி சிலைக்கு உயிர் கொடுத்து, காலை மாற்றி மடித்து வைத்து உட்கார வைத்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் ,கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான். உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். கருணைக்கடலான நம் அண்ணாமலையார் உடனே பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமருமாறு உத்தரவிட்டார். அன்று முதல் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து #இடது_காலை முன் வைத்து #அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான் அன்று அங்கு வந்த பாலகன் தான் இன்று #வீரேகிய_முனிவர் என அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம் அண்ணாமலையார் கோவிலுக்கு வடக்கே இருப்பதாலேயே,பெரிய நந்தியின் முகம் வடக்கு பக்கம் லேசாக திரும்பி காணப்படுகிறது. வீரேகிய முனிவர் நினைவாக இங்கு அவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது. இக்கதைக்கான ஆதாரங்களை இக்கிராமத்திற்கு சென்றால் காணலாம். பர்வதமலை அருகே தற்சமயம் சீலப்பந்தல் என்று அழைக்கபடும் சீநந்தல் எனும் கிராமத்தில் இந்த வீரேகிய முனிவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது.

தீபத் திருநாள் !

தீபத் திருநாளன்று மலையடிவாரத்தில் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படுவது-பரணி தீபம், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் ஏற்றப்படுவது மகாதீபம். மகாதீபத்துக்கு 200 கிலோ நெய், 1 டன் திரி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மகாதீபத்துக்கான வெண்கலக் கொப்பரை, கி.பி. 1745-ஆம் ஆண்டு, மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதிராயனால் வழங்கப்பட்டது. மலை மேல் தீபம் ஏற்ற உரிடை பெற்றவர்கள் பர்வத ராஜ குலம் எனப்படும் மீனவ குலத்தவர். ஆலயத்தின் தீப தரிசன மண்டபத்தில், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்துடன் மகாதீபம் ஏற்றப்படும்.



Arulmigu Arunachaleswarar Temple - Thiruvannamalai

திருவண்ணாமலை தீர்த்தங்கள்!

திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.

திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.

திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.

திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார். நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம். திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.

திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள். திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர். திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.

திருவண்ணாமலையின் 360 தீர்த்தங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மூர்த்தங்களாலும் (தெய்வ விக்ரஹங்கள்) தீர்த்தங்களாலும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக கோயிலிலுள்ள கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே புண்ணியம் மிகுந்த சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இதிலுள்ள தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு அண்ணாமலையாரையும், உண்ணாமலையம்மையையும் தரிசித்து வழிபட வேண்டும். காலபைரவர் சன்னதிக்கு எதிரில் பிரம்மதீர்த்தம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மலையில் முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும். அல்லிச்சுனை, அரளிச்சுனை, வழுக்குப்பாறைச் சுனை, அரசன் சுனை, மயிலாடும் பாறைச் சுனை, ஊத்துக் குட்டைச் சுனை, பவழக்குன்றுச் சுனை கழுதைச் குறத்திச் சுனை, சாரங்கன் சுனை, கரடிச் சுனை, தனக்க மரத்துச்சுனை, புங்க மரத்துச் சுனை, நெல்லிமரத்துச் சுனை, ஆலமரத்துச் சுனை, குமார சுனை, கல்சுத்தி மரத்துச் சுனை, ஆள் இறங்கிக் குளித்திடும் அளவுக்கான தொல்லாங்கன் சுனை, இடுக்குச்சுனை, வலக்கையால் பாறையைப் பிடித்து இடக்கையால் மட்டுமே நீர் அருந்தும் ஒறட்டுக்கை சுனை (ஒறட்டு என்றால் இடது என்று பொருள்), தவழ்ந்து உள்ளே சென்று நீர் குடிக்கும் புகுந்து குடிச்சான் சுனை ஆகிய குட்டித்தீர்த்தங்களும் உள்ளன.



Arulmigu Arunachaleswarar Temple - Thiruvannamalai

பஞ்ச பருவ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திர சோழ மன்னர் காலத்தில் இருந்தே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.மூன்றாம் குலோத்துங்க மன்னரின் காலத்தில் இவ்விரண்டு திருவிழாவுடன், தை மாதத்தில் திருவூடல் விழாவும் நடந்துள்ளது. சித்திரையில் 10 நாள் திருவிழா நடைபெறும். ஆவணியில் மூல நாளில் மூலத்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

ஒன்பது கோபுரங்கள்!

கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும். கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.



Arulmigu Arunachaleswarar Temple - Thiruvannamalai



Thiruvannamalai Arulmigu Arunachaleswarar Temple Holy Hill


Though devoid of vegitation the thiruvannamalai hill stands in prominence amidst picturesque sorroundings ans is vissable for miles arond.it is 2668 feet height. this Arunavhaleswarar hill is of igneous rock which is one of the four kinds of mountains classified geology. so one sees the truth behind the tradition regarding the origin and formation of this thiruvannamalai hill. our religious philosophy is based on science and there is always the combination of Vignana and Meygnana,these two are inextricably interwined.

Thiruvanamalai Arunachala hill has a high status in our scared tradition and tamil legends hold that it is far more ancient than the Himalayas which are comparatively known to be of later orgin. Arunachala is combination of two sanskrit words Aruna and Chala Aruna means RED and Chala Means Immovable mount, there by kwows RED MOUNT. It is also called the hill of the HOLY Beacon and HILL OF HOLY FIRE. Aruna is force(Shakthi) and chala is siva i.e.,that which cannot moved. The thiruvannamalai hill therefour represents Siva And Parvathi.

The Names of this Thiruvannamali holy places are various. The common and popular Name is Thiruvannmalai.Othe name are Arunachala, Arunagiri,Sonachala,Arunapuri. The five elements of the universe are Earth, Water,Fire, Air and ether and our sastras call them Pancha Bootham. These five elements are represented by five sacres or pancha bootha sthalam of which Thiruvannmalai is one. Earth sthalam is Kancheepuram, Water Sthalam is Thiruvanaikaval, Fire Sthalam is Thiruvannamalai, Vayu(Air) Sthalam is Srikalahasthi,And Akasa (Ether) sthalam is Chidambaram,of the six athara Kshetrams, Thirvannamalai is said to be a Manipooraga Kshetram.

It is also one of the Saivite Shrines sung by the great Saints Appar, Sundarar, Samanthar, and manikavasakar. Three important facotor constitute the greatness of this place, namely 1.the dispute between Brahma and Vishnu which resulted in the origin of thiruvannamalai and celebration of Karthigai Deepam Thiruvizha. 2.Godess Parvathi, permormed penance and got the left half of LORD SHIVA's body (Vamabagha) 3.The Association of saintly personages like Arunagirinathar, Guhai Namasivayar, Guru Namasivayar, Isanya Gnana Desikar, Deivasikamani Desikar, Seshadri swamikal and Ramana Swamigal.

SkANTHA PURANAM Says that lord Muruga marched from north to south to wagewar with Surapadma he visited Thiruvannamalai. Ancient Sanskrit and Tamil Litrature have made eulogistic remarks about this bshrine and deepam festival. The places is also noted for the existense of holy waters (theerthams)the bathing in which will purge one's sins and purify the soul. it is said that there are as many 360 theerthama and 400 Lingams in the eight mile circuit of the thiruvannamalai hill.





Arulmigu Arunachaleswarar Temple Thiruvannamalai

Arulmigu Arunachaleswarar Temple - Thiruvannamalai